ஆம் நமக்கு நிச்சயம் 'குரு' வேண்டும், மாதா, பிதா, குரு, தெய்வம், என்ற நம் முன்னோர்களின் அருள் மொழியை நாம் மறந்துவிடக்கூடாது. எவ்வளவு தான் நாம் படித்துப் பட்டம் பெற்றாலும் படித்த படிப்புக்கு நல்ல ஊதியம் கிடைக்குமே தவிர நல்ல ஆன்ம அமைதியும், ஆன்ம வளர்ச்சியையும் நாம் படித்து பட்டம் பெற்ற பதவியில் பெற முடியாது. காரணம் படிப்பு வேறு, ஆன்மலாபம் அடையும் வழி வேறு. படித்து நாம் முன்வரக்காரணம் நிச்சயம் நம் ஆசிரியர்கள் ஆவார்கள்.
நாம் வந்த காரணம் என்ன? இறைவன் நம்மை மனித பிறப்புடன் படைத்த காரணம் என்ன? மனிதனாய் பிறந்த நாம் ஒவ்வொரு மனிதனுக்கும் என்ன செய்ய வேண்டும்? பிறவியின் நோக்கம் என்ன? மனிதராய் பிறந்தால் மட்டும் போதாது.
நாமும் மனிதரில் மாணிக்கமாய் வாழவும், பிறரையும் வாழவைக்கும் நல்ல ஒழுக்க அறிவையும் நடத்தையும் ஊட்டி, மனிதன் மனிதனாய் வாழ வந்தவர்கள், (மிருகமாக) அல்ல என்று நமக்கு சுட்டிக்காட்டி, நம் தவறுகளை நாமே உணர்ந்து திருந்தி இறைவன் கருணையை கருணையின் மூலமாய் அடையும் வழிமுறைகளை காட்டி, கூட்டி வழி நடத்துபவர்களைத்தான் 'குரு' என்று அழைப்போம். ஆகையால் நிச்சயம் நமக்கு தவமும், சத்தியமும், ஒழுக்கமும், உண்மையும், தயவும் நிறைந்த "குரு" இக்கலியுகத்தில் சத்தியமாய் நமக்கு தேவை.
தயவுடன்
சற்குரு அடிமை
நடராஜா பாபா
No comments:
Post a Comment